திரைச்செய்திகள்

தனியொருவன், கூட்டத்துல ஒருத்தன், நான் தனியாளு இல்ல, தானா சேர்ந்த கூட்டம், இப்படி விதவிதமாக தலைப்புகளை வைக்கும் தமிழ்சினிமாவில் இந்த எல்லா தலைப்புகளுக்கும் பொருந்துகிற மாதிரிதான் நடக்கிறது சம்பவங்களும் சச்சரவுகளும்.

தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் விஷால் அணியும் மோதுகிறது அல்லவா? இதனால் கசப்புக் கூழ் குடிக்கிறது இதுவரை அதிகாரத்திலிருந்த ஒரு பெரும் கூட்டம்.

விஷாலுக்கு எதிராக காய்களை நகர்த்திக் கொண்டேயிருக்கிறார்கள். விளைவு? அவரது வேட்பு மனு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நேரத்தில்தான் விஷால் அணியில் சேர நான் நீ என்று போட்டி போட்டுக் கொண்டு உள்ளே வருகிறது ஒரு கூட்டம்.

அதில் எஸ்.ஏ.சந்திரசேகரும் ஒருவர். தயாரிப்பாளர் தாணுவுக்கு செம நெருக்கமாக இருக்கும் இவர், ஏன் அவரது பரம எதிரியான விஷால் அணியில் சேர  தூது விட வேண்டும்? இந்த கேள்வியை கசக்கி பிழிந்து துவைத்து காயப் போட்டால் விஷால் புத்திசாலி. இல்லாவிட்டால், சூதும் தீதும் சேர சோப்ளாங்கி ஆக வேண்டியதுதான் என்று கவலைப்படுகிறது நடுநிலை வாக்காளர் கூட்டம்!