திரைச்செய்திகள்

பல வருஷங்களுக்குப் பின் சிரஞ்சீவி நடித்த படம் தாறுமாறு ஹிட். தமிழில் வந்த கத்தி படத்தின் தெலுங்கு ரீமேக்தான் அது.

சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்க யாரைப் போடுவது என்று ஆரம்பத்தில் ஏற்பட்ட குழப்பத்தை தீர்த்து வைத்த புண்ணியவான் நம்ம லாரன்ஸ்தான்.

“சார்... என் கூட லட்சுமிராய் காஞ்சனா படத்தில் நடிச்சாங்க. நல்ல ஹைட். உங்களுக்கு கரெக்ட்டா இருக்கும்” என்று சிபாரிசு செய்தாராம்.

அதற்கப்புறம் சிரஞ்சீவி லாரன்ஸ் பேச்சை தட்டவில்லை. அந்த நன்றிக்கடன் அப்படியே இருந்தது லட்சுமிராயின் மனசில்.

‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படத்தில் ஒரு பாட்டுக்கு ஆட வேண்டும் என்று மாஸ்டர் அழைத்ததும், ஓடோடி வந்துவிட்டார்.

‘ஹர ஹர மகா தேவகி’ என்கிற அந்த பாடலில் அஷ்ட இஷ்ட ஆட்டத்திற்கு எப்படிதான் சென்சார் ‘யு’ கொடுத்ததோ? அது போகட்டும்...

இப்போது இன்டஸ்ட்ரி லாரன்சை எப்படி அழைக்கிறது தெரியுமா? மா..ஜி என்று! ‘மாஸ்டர் ஜி’ தான் சுருங்கி ‘மாஜி’ ஆகியிருக்கிறார்.