திரைச்செய்திகள்

ஆல்மோஸ்ட் எக்ஸ்பயரி கண்டிஷனில் இருந்த ஹன்சிகாவின் மார்க்கெட்டை, மறுபடியும் உயிரேற்றியிருக்கிறான் போகன்!

இப்படத்தில் ஹன்சிகாவை பார்த்தவர்கள், வயசை ரிவர்ஸ் கியர் அடித்து திருப்பிவிட்டாரோ என்று சந்தேகப்படுகிற அளவுக்கு கிண்ணென்று மாறியிருந்தார். நடுவில் படம் இல்லாமல் போனதால் ஏற்பட்ட புத்துணர்ச்சிதானாம் இது.

படமும் திரையிட்ட இடத்திலெல்லாம் திகுதிகு வசூல். ஐம்பது லட்சம் கொடுத்தால் கூட போதும் என்று ஜி.வி.பிரகாஷ் வரைக்கும் கெஞ்சி படங்களை கொத்திய ஹன்சிகா மீண்டும் கால் மேல் கால் போட்டுவிட்டார்.

சம்பளமும் திகுதிகுவென ஏறிவிட்டதாம். இதையெல்லாம் எதிர்பார்த்துதான் சென்னையிலேயே வீடு பார்த்து தங்கினார் போல... என்று அவர் குறித்து பொற்....றாம பட ஆரம்பித்திருக்கிறார்கள் சக ஹீரோயின்கள். முருங்கை மரம் குட்டையா இருந்தாலும், முருங்கைக்காய் வளரும்!
--