திரைச்செய்திகள்

எமன் படத்தின் பாடல் வெளியீட்டு விழா சத்யம் அரங்கில் நடந்தது. மேடை கொள்ளாத விஐபிகள் கூடியிருக்க, ஆளுக்கு ஐந்து நிமிஷம் பேசினாலே அடுத்த ஷோ கேன்சல்தான் என்கிற அளவுக்கு நிலைமை படு மோசம்.

ஆனால் எல்லாரையும் பேசவிட்டுவிட்டு தன் பேச்சை சுருக்கிக் கொண்டார் படத்தின் ஹீரோ விஜய் ஆன்ட்டனி. தமிழில் பெரிய ஸ்டார். தெலுங்கில் பெரிய ஸ்டார். அப்படியே இந்திய லாங்குவேஜ் எல்லாத்துலேயும் நீங்க ஸ்டார் ஆகணும் என்றெல்லாம் பலரும் வாழ்த்தி மகிழ்ந்தார்கள். இவ்வளவு கூட்டத்திற்கு நடுவில் எவ்வித ஆர்ப்பாட்டமும் இன்றி அமைதியாக அமர்ந்திருந்தார் திருமதி உதயநிதி ஸ்டாலின். கிருத்திகாவுக்கு அங்கென்ன வேலை? படத்தின் டைரக்டர் ஜீவா சங்கர் இவரது கிளாஸ்மெட். அதுமட்டுமல்ல... விரைவில் விஜய் ஆன்ட்டனி நடிக்கும் படத்தை இயக்கப் போகிறார் கிருத்திகா. தயாரிப்பு ரெட்ஜயன்ட் நிறுவனமாம்!