திரைச்செய்திகள்

தமிழ்சினிமா இன்னும் எத்தனை காலத்திற்குதான் பல்லிளித்துக் கொண்டிருக்குமோ?

சிங்கம் 3 படம் வெளிவந்த அடுத்த நிமிஷமே அப்படத்தை பேஸ்புக்கில் லைவ் பண்ணிவிட்டது தமிழ்ராக்கர்ஸ் என்கிற இணைதளம்.

உலகத்தின் ஏதோ ஒரு மூலையில் இருந்து இயங்கி வரும் இந்த தளத்தை தடுத்து நிறுத்த யாருமே முன் வராத நிலையில், பேச்சடைத்து நிற்கிறார் இப்படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா.

போன வாரம்தான் போகன் படத்தை பேஸ்புக்கில் லைவ் பண்ணியது இதே இணையதளம்.

ஒரே நாளில் நாலரை லட்சம் பேர் அந்த படத்தை பார்த்திருக்கிறார்கள். இப்படி தயாரிப்பாளர்களின் உயிரை சுரண்டும் இந்த விஷயத்தை எப்போது யார் தடுப்பார்கள்?

போண்டா வடை தின்றுவிட்டு பஞ்சாயத்து பண்ணும் பெருசுகள், ஒரு முறை டெல்லி சென்று ஜனாதிபதியிடம் மனு கொடுக்கலாம் அல்லவா? வெட்கம்...