திரைச்செய்திகள்

பாபிசிம்ஹா தன் மேனேஜர் சதீஷ் பெயரில் பினாமியாக தயாரித்து நடிக்கும் படம் ‘வல்லவனுக்கும் வல்லவன்’.

இதில் பதினொரு கெட்டப்பில் அவர் நடிக்கிறார். அவர் போடாத 12 வது கெட்டப்தான் மிகக் கொடூரம்.

படத்தின் இணை தயாரிப்பாளராக உள்ளே வந்த செந்தில் குமரன் என்பவருக்கு இவர் 20 லட்சம் தர வேண்டுமாம்.

நடுவில் புட்டுக் கொண்ட நட்புக்கு பின், இந்த இருபது லட்சத்திற்கான காசோலையை கொடுத்துவிட்டார் பாபி.

செக் பேங்குக்கு போன வேகத்தில் திரும்பிவிட்டது. பணத்தை நியாயமாக கேட்டுப் பார்த்தவர், துட்டு பெறாது என்பதை தெரிந்தவுடன் செக் மோசடி வழக்கு போட எத்தனித்தாராம்.

அதற்கு முன்பே காவல் நிலையத்தில் தன் மேனேஜர் சதீஷ் மூலம் புகார் கொடுத்த பாபிசிம்ஹா, தன் செக் ஸ்லிப்பை செந்தில் குமார் திருடிவிட்டதாக பழி சுமத்த... பதறிப் போய்விட்டார் செந்தில்.

நல்லவேளையாக 20 லட்சம் தொடர்பாக அவர் வைத்திருந்த ஆவணங்களால் காப்பாற்றப்பட்டார்.

விஷயம் அதோடு முடியவில்லை. கோடம்பாக்கம் முழுக்க பாபியே போன் பண்ணி, “தெரியுமா சேதி? செந்தில் 20 லட்சத்தை திருடிட்டான்” என்று ஒப்பாரி வைக்க, தன் எதிர்காலமே கறையாகிடுச்சே என்ற கவலையில் தவிக்கிறார் செந்தில்.

இவற்றையும் பார்வையிடுங்கள்

கொரோனா அலை முடிந்தபிறகுதான் அஜித் வலிமை படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என்று அஜித் தரப்பில் முதல் கூறப்பட்டது.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

ஒரே படத்தின் மூலம் இரண்டு முக்கியப் பிரச்சினைகளை உயிரோட்டம் குறையாமல் கையாள முடியுமா ? இரண்டையும் சரியான புள்ளியில் இணைந்து விறுவிறுப்பு குன்றாமல் ஊக்கமுடன் கதைக் களத்துக்குள் நம்மை அழைத்துச் செல்ல முடியுமா? முடியும் என்று காட்டியிருக்கிறார் அறிமுக இயக்குநர் விருமாண்டி.

இந்திய சினிமாவுக்கு உலக அரங்கில் பெரிய மரியாதையைப் பெற்றுகொடுத்தவர் வங்கமொழித் திரைப்பட இயக்குநரும் ஓவிய மேதையுமான சத்யஜித் ராய்.

குதிரைக்கும் தமிழருக்குமான காலத் தொன்மை தொடர்பு 5 00 000 – 2 00 000 ஆண்டு என்பதற்கு சான்று பகர்வது தொல்லியல் ஆய்வு ஆகும் .

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேரடி கட்சி அரசியலில் ஈடுபட போவதாக கடந்த 2017-ஆம் ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதி அறிவித்தார்.

மூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் டிரைலர்