திரைச்செய்திகள்

இது நடந்தே தீரும் என்று கோடம்பாக்கத்தில் பலரும் எதிர்பார்த்த விஷயம்தான்.

ஒரு நாள் ராத்திரி நடந்தேவிட்டது. ‘அன்பானவன் அடங்காதவன் அசராதவன்’ என்ற படத்தில் நடித்து வரும் சிம்பு, படம் துவங்கி ஒரு மாதம் வரைக்கும் ஒரு நாள் தவறாமல் படப்பிடிப்புக்கு வந்தார்.

தமிழ்சினிமாவுலகமே இந்த வியத்தகு மாற்றத்தை கண்டு வாயடைத்துப் போனது.

அதற்கப்புறம்தான் குண்டூசி சைசுக்கு கொஞ்சமாக சிக்கல் துவங்கியது. இந்தப்படத்திற்காக பைனான்ஸ் வாங்கிக் கொடுத்த மீடியேட்டர் ஒருவரால் சிம்பு உசுப்பேற்றப்பட்டார்.

அப்புறம் தயாரிப்பாளருக்கும் ஹீரோவுக்கும் உரசல் வர.... ட்ரிப்பிள் ஏ வுக்கு தீராத குடைச்சல்! பொறுத்துப் பொறுத்துப் பார்த்த தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் சிம்புவை அடிக்க அடியாட்களை ஏவி விட்டாராம்.

நல்லவேளை... விபரீதம் ஏதும் நிகழ்வுதற்குள் சிம்பு தப்பித்தார். ஆனால் சீனில் இறங்கிய டி.ஆர், மைக்கேல் ராயப்பனை உண்டு இல்லை என்று ஆக்குவதற்கு முடிவெடுத்துவிட்டார்.

ஆக மொத்தம் எல்லாருமாக சேர்ந்து ட்ரிப்பிள் ஏ வுக்கு பொட்டியடித்து படத்தை மம்மியாக்கிவிடுவார்கள் போலிருக்கிறது.

கொரோனா ஊரடங்கு காலத்தை பயனுள்ள வகையில் பாடல்கள் உருவாக்குவதில் செலவழித்து வருகிறார் ஸ்ருதிஹாசன்.

சுவிற்சர்லாந்தில் நடைபெற்று வரும் 73 வது லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவின் Open Door எனப்படும் பகுதி இம்முறை தென் கிழக்காசிய நாடுகளின் திரைப்படங்களுக்கு ஐரோப்பிய நுழைவாயிலாக தன் கதவுகளை திறந்திருந்தன.

சில படங்கள் எல்லா காலத்துக்கும் பொருந்தக் கூடிய உண்மையை வெட்டவெளிச்சமாக்கிக் காட்டுபவை. வெற்றிமாறன் இயக்கத்தில் 2015-ல் வெளியான ‘விசாரணை’ திரைப்படத்தை, சாத்தான்குளம் அப்பா - மகன் படுகொலைகள் தூக்கமின்றி தவித்த நள்ளிரவில் நினைவூட்டின.

" இயற்கை மற்றும் விலங்குகளின் மீதான மனித நேசிப்பினையும், மனிதர்களுடனான நல்லிணக்கத்தை விலங்ககளிடமும், தோற்றுவிப்பதன் அடையாளமாக இந்தியக் கோவில் யானைகளை நான் பார்க்கிறேன். தயவு செய்து அந்த மரபை அழித்துவிடாதீர்கள் ! " என்றார் இயக்குனர் அன்னா போல்மார்க் (Anna Bohlmark ).

வொயேஜர் 1 (Voyager 1) என்பது ஐக்கிய அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையத்தினால் 1977 செப்டம்பர் 5 இல் சூரியக் குடும்பத்தின் வெளிப்புறத்தை ஆராய்வதற்காக ஏவப்பட்ட ஓர் ஆளில்லா விண்ணுளவி ஆகும்.

விஜய் டிவியின் கலக்கப் போவது யாரு? நிகழ்ச்சியின் மூலம் திரையுலகில் அடியெடுத்து வைத்து தற்போது பிரபலமான நகைச்சுவை நடிகராக இருந்து வருபவர் ரோபோ சங்கர்.

வில்லியம் சாட்னர் எனும் ஆங்கில திரைப்பட இயக்குனர் யானைகளை அடிப்படையாக கொண்டு 'வனத்திற்குள் திரும்பு' என்ற திரைப்படத்தை எடுத்தார்.