திரைச்செய்திகள்

மன்னன் படத்தை ரீமேக் செய்ய வேண்டும் என்று டைரக்டர் பி.வாசு நினைத்து,

அதில் ஹீரோவாக நடிக்க வைக்க லாரன்சையும் முடிவு செய்துவிட்டார். அந்த நேரத்தில் கருத்து தெரிவித்த சிவாஜி புரடக்ஷன் முதலாளியும் நடிகருமான பிரபு.

“இல்ல.... மன்னன் ரீமேக்கில் விக்ரம் பிரபு நடிக்கப் போகிறார்” என்று முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்.

இருந்தாலும் லாரன்ஸ்சுக்கு இருக்கிற பல கோடி பிசினஸ் மின்னல் படக் படக்கென கண்ணில் வந்து அடித்ததாம் மற்றொரு முதலாளியான ராம்குமாருக்கு.

இதே புராஜக்டை ட்ரை பண்ணி பார்ப்போம் என்று நினைத்து பேச்சு வார்த்தையை முடுக்கி விட்டிருக்கிறாராம்.

இதில் ஒரு சீனிலாவது ரஜினியை நடிக்க வைத்துவிட வேண்டும் என்பதுதான் முதல் ஆசையாக இருக்கிறதாம் அனைவருக்கும்.

இப்படியே நல்ல நல்ல சுவத்துக்கெல்லாம் சுண்ணாம்பு தடவிகிட்டேயிருங்க. ரசிகர்கள் சேர்ந்து ரீமேக்குங்கிற கலாச்சாரத்துக்கே லாடம் கட்டிடுவாங்க!

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

பாரதிராஜா நடப்புத் தயாரிப்பாளர்கள் சங்கம் தொடங்கியதால் கடுப்பான தயாரிப்பாளர் கவுண்ஸிலைச் சேர்ந்த பலரது எதிர்பார்ப்பு சினிமா தொழிலாளர்கள் சங்கமான பெப்சி உடைய வேண்டும் என்பது. அதை எடுத்துக்காட்டுவதுபோல ஒரு தயாரிப்பாளின் பதிவு அமைந்துள்ளது. அவர் தனது பதிவில்:

லொகார்னோ திரைப்பட விழாவில் குறுந்திரைப்படங்களுக்கான போட்டியில், சர்வதேச போட்டிப் பிரிவில் போட்டியிடும் திரைப்படம் "1978" இல் பாகிஸ்தான்.

சில படங்கள் எல்லா காலத்துக்கும் பொருந்தக் கூடிய உண்மையை வெட்டவெளிச்சமாக்கிக் காட்டுபவை. வெற்றிமாறன் இயக்கத்தில் 2015-ல் வெளியான ‘விசாரணை’ திரைப்படத்தை, சாத்தான்குளம் அப்பா - மகன் படுகொலைகள் தூக்கமின்றி தவித்த நள்ளிரவில் நினைவூட்டின.

" இயற்கை மற்றும் விலங்குகளின் மீதான மனித நேசிப்பினையும், மனிதர்களுடனான நல்லிணக்கத்தை விலங்ககளிடமும், தோற்றுவிப்பதன் அடையாளமாக இந்தியக் கோவில் யானைகளை நான் பார்க்கிறேன். தயவு செய்து அந்த மரபை அழித்துவிடாதீர்கள் ! " என்றார் இயக்குனர் அன்னா போல்மார்க் (Anna Bohlmark ).

நாம் தனிமையில் இல்லை...' (We are Not Alone!)  4 தமிழ்மீடியாவின் புதிய அறிவியல் தொடர். எமது பிரபஞ்சம் மிகவும் ரம்மியமானது.

சிம்பு மாநாடு படத்தில் நடிக்கத் தொடங்கியபிறகு மிகவும் நல்லப் பிள்ளையாக மாறிவிட்டார் என்று கோலிவுட்டில் பேசப்பட்டது.

வில்லியம் சாட்னர் எனும் ஆங்கில திரைப்பட இயக்குனர் யானைகளை அடிப்படையாக கொண்டு 'வனத்திற்குள் திரும்பு' என்ற திரைப்படத்தை எடுத்தார்.