திரைச்செய்திகள்

தமிழில் ஸ்ருதிஹாசனை யாரும் அந்தளவுக்கு கொண்டாடுவது போல தெரியவில்லை.

ஆனால் தெலுங்கில் அவருக்கு இருக்கிற கிரேஸ்... தெலுங்கிலிருக்கும் அத்தனை வார்த்தைகளிலும் அடங்குவதாக இல்லை.

பல நேரங்களில் பட வியாபாரத்தில் ஸ்ருதியின் பங்கும் செம செம என்கிறது அங்கிருந்து வரும் தகவல்கள்.

இதனால் தமிழ் தெலுங்கு இரு மொழிகளிலும் டாப்பில் இருக்கும் ஹீரோக்களின் படங்களில் தவறாமல் இடம் பிடித்துவிடுவது ஸ்ருதியின் லக் ஆக இருக்கிறது.

சமீபத்தில் அவருக்கு மாட்டிய லக் இதுதான். சுமார் 200 கோடியில் உருவாகப் போகும் சங்கமித்ரா படத்தில் ஸ்ருதியை புக் பண்ணிவிட்டார்கள்.

ஜெயம் ரவி,  ஆர்யா நடிக்கும் இப்படத்தில் பிரபல தெலுங்கு ஹீரோ ஒருவரும் நடிக்கப்போகிறாராம்.

ஆர்யாவையும் ஜெயம் ரவியையும் வைத்துக் கொண்டு 200 கோடிக்கு படம் எடுத்தால் உருப்பட வாய்ப்புள்ளதா? எல்லாம் ஸ்ருதியின் இரண்டு மீட்டர் துணியை நம்பி இருக்கிறதோ என்னவோ?

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

பாரதிராஜா நடப்புத் தயாரிப்பாளர்கள் சங்கம் தொடங்கியதால் கடுப்பான தயாரிப்பாளர் கவுண்ஸிலைச் சேர்ந்த பலரது எதிர்பார்ப்பு சினிமா தொழிலாளர்கள் சங்கமான பெப்சி உடைய வேண்டும் என்பது. அதை எடுத்துக்காட்டுவதுபோல ஒரு தயாரிப்பாளின் பதிவு அமைந்துள்ளது. அவர் தனது பதிவில்:

லொகார்னோ திரைப்பட விழாவில் குறுந்திரைப்படங்களுக்கான போட்டியில், சர்வதேச போட்டிப் பிரிவில் போட்டியிடும் திரைப்படம் "1978" இல் பாகிஸ்தான்.

சில படங்கள் எல்லா காலத்துக்கும் பொருந்தக் கூடிய உண்மையை வெட்டவெளிச்சமாக்கிக் காட்டுபவை. வெற்றிமாறன் இயக்கத்தில் 2015-ல் வெளியான ‘விசாரணை’ திரைப்படத்தை, சாத்தான்குளம் அப்பா - மகன் படுகொலைகள் தூக்கமின்றி தவித்த நள்ளிரவில் நினைவூட்டின.

" இயற்கை மற்றும் விலங்குகளின் மீதான மனித நேசிப்பினையும், மனிதர்களுடனான நல்லிணக்கத்தை விலங்ககளிடமும், தோற்றுவிப்பதன் அடையாளமாக இந்தியக் கோவில் யானைகளை நான் பார்க்கிறேன். தயவு செய்து அந்த மரபை அழித்துவிடாதீர்கள் ! " என்றார் இயக்குனர் அன்னா போல்மார்க் (Anna Bohlmark ).

நாம் தனிமையில் இல்லை...' (We are Not Alone!)  4 தமிழ்மீடியாவின் புதிய அறிவியல் தொடர். எமது பிரபஞ்சம் மிகவும் ரம்மியமானது.

சிம்பு மாநாடு படத்தில் நடிக்கத் தொடங்கியபிறகு மிகவும் நல்லப் பிள்ளையாக மாறிவிட்டார் என்று கோலிவுட்டில் பேசப்பட்டது.

வில்லியம் சாட்னர் எனும் ஆங்கில திரைப்பட இயக்குனர் யானைகளை அடிப்படையாக கொண்டு 'வனத்திற்குள் திரும்பு' என்ற திரைப்படத்தை எடுத்தார்.