திரைச்செய்திகள்

பிரபல விநியோகஸ்தர் திருப்பூர்சுப்ரமணியன் வெளியிடுகிற ஆடியோ பதிவுகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ஹீரோக்களுக்கும் வைக்கப்பட்ட குண்டு.

ரஜினி, விஜய், சூர்யா, ஜெயம்ரவி, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட சுமார் ஏழு நடிகர்களின் பெயரை சொல்லி அவர்களின் சமீபத்திய படங்களின் வசூல் நிலவரத்தையும் புட்டு புட்டு வைத்துவிட்டார்.

“இந்த நிலவரம் எதுவும் புரியாம அங்க உட்கார்ந்துகிட்டு அரசியல் அறிக்கை கொடுக்கிறீங்க. முதலமைச்சரை மீட் பண்ணுவேன்னு சொல்றீங்க. பிரதமரை பார்ப்பேன்னு சொல்றீங்க.

முதல்ல உங்க படத்தை வாங்குன விநியோகஸ்தர் செத்தாரா இருக்காரான்னு பாருங்க” என்று சீறியிருக்கிறார். இந்த ஆடியோ மின்னல் வேகத்தில் கோடம்பாக்கத்தை சுற்றி வருவதால், பல ஹீரோக்கள் படு கோபத்திலிருக்கிறார்கள்.

சொல்ல வேண்டியதை எங்ககிட்ட சொல்லாம இப்படி பொத்தாம் பொதுவுல போட்டு தாக்கணுமா? என்பதுதான் அவர்களின் ஆத்திரம். சமூக வலைதளங்களில் பல்லாயிரம் ஷேர்களை தாண்டி ஓடிக் கொண்டிருக்கும் இந்த ஆடியோ பதிவை அடுத்து, திருப்பூராரின் வாயை இனி வரும் காலத்திலாவது அடக்க முடியுமா என்று திட்டம் போடுகிறது கோடம்பாக்கம். (பதிலுக்கு ஆடியோ வெளியிடுவாங்களோ?)