திரைச்செய்திகள்
Typography

அவ்வளவு சீக்கிரம் அசருகிற ஆள் இல்லை விஷால் என்பதை அந்த மேடை நிருபித்தது.

சமீபத்தில் ஒரு படத்தின் பாடல் வெளியீட்டு விழாவுக்கு வந்த விஷாலின் பேச்சில் வழக்கத்திற்கும் மாறாக செம சுவாரஸ்யம். “விஷாலை கைது செய்... விஷாலை கைது செய்னு அவங்க நடிகர் சங்கத்திற்கு முன்னால் நின்று கோஷம் போட்டதை நான் டி.வியில் பார்த்துகிட்டு இருந்தேன்.

வீட்ல என்னடா பார்த்துகிட்டு இருக்கேன்னு கேட்டாங்க. காமெடி சேனல் பார்க்குறேன்னு சொன்னேன். இதுக்கெல்லாம் அஞ்சுகிற ஆள் நான் இல்ல. ராதாரவியையே பார்த்துட்டோம். இவங்கள்லாம் எம்மாத்திரம்?” என்றார் விஷால். கொடுமை என்னவென்றால், அதே நடிகர் சங்கத்தின் முன் அதே தினத்தன்று ஆர்ப்பாட்டம் செய்த தயாரிப்பாளர் டி.சிவாவும் அதே மேடையில் இருந்ததுதான்!

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்