திரைச்செய்திகள்
Typography

ஜல்லிக்கட்டு ஹீரோக்களான மாணவர்களின் கூட்டத்தில் புகுந்து, மரியாதையை தனக்கும் பங்கு போட்டுக் கொண்டதாக லாரன்ஸ் மீது கடுப்புக் கண்களோடு திரியும் சிலருக்கு இந்த செய்தி தேனாக இனிக்கலாம்.

அவரது லேட்டஸ்ட் படமான ‘மொட்ட சிவா கெட்ட சிவா’வுக்கு நாலாபுறத்திலிருந்தும் நசுங்கல் பொசுங்கல்! “இது நம்ம அண்ணன் படம். எல்லாரும் போய் பார்க்கணும்” என்றெல்லாம் அவர் மீது பிரியம் கொண்ட ஸ்டூடன்ஸ் கூட்டம் ஒன்று ட்விட் பண்ணிக் கொண்டேயிருந்தது.

பட்...? படம் வேற. போராட்டம் வேற. என்று தனித்தனி பார்வையோடு தள்ளி விட்டுவிட்டார்கள் அந்த கோரிக்கையை! கட்ட கடைசியில் கை கொள்ளாத நஷ்டம் லாரன்சுக்குதான். பல கோடி சம்பளத்தையும் விட்டுக் கொடுத்து மேலும் கொஞ்சத்தையும்  கொடுத்தவராச்சே?

Most Read