திரைச்செய்திகள்
Typography

மிஷ்கினிடம் பணியாற்றிய ஒருவரது கதையை கேட்டுவிட்டு ஆஹா ஓஹோ ஆகியிருந்தார் நயன்தாரா.

அவருக்கு கால்ஷீட்டும் கொடுத்திருந்தார். இப்படத்தை ஈராஸ் நிறுவனம் தயாரிப்பதாக இருந்தது. அதில்தான் திடீர் சறுக்கல். பிரான்சில் செட்டில் ஆன இலங்கை பெண் ஒருத்தியின் கதைதானாம் இது. முழுக்க முழுக்க பிரான்சிலேயே எடுப்பதாகவும் ஸ்கெட்ச் போட்டிருந்தார்கள். யார் குழப்பிவிட்டார்களோ, திடீரென பின் வாங்கிவிட்டார் நயன். இருந்தாலும், நம்புனவங்கள கைவிட மாட்டேன். வேற கதையோட வாங்க என்று கூறியிருக்கிறாராம். மின்னல் கொடிய மிரட்டுனது யாருப்பா?

Most Read