திரைச்செய்திகள்

உள்ளூர் அரசியலில்தான் உம்முன்னு இருக்கார். வெளியூர்ல விட்டா வெங்காயத்தை வெந்தயமாக்கி, அந்த வெந்தயத்தை வச்சு பந்தயமே நடத்திடுவாருப்பா… என்று

அவரது ரசிகர்கள் நெஞ்சு வீங்குகிற அளவுக்கு சந்தோஷப்பட ஒரு மேட்டர் கிடைச்சாச்சு. வேறொன்றுமில்லை… மலேசியா அரசு அவருக்கு ஒரு முக்கியமான பதவியை தர முடிவு செய்திருக்கிறது. அதுதான் மலேசியா சுற்றுலாத்துறை தூதர் பதவி.

இது குறித்து மலேசிய நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை, சுற்றுலாத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ மொகமட் நஸ்ரி அப்துல் அசிசும், ஜசெக கோத்தா மெலாக்கா நாடாளுமன்ற உறுப்பினர் சிம் தோங் ஹின்னும் விவாதித்தனர்.

“இதற்கு முன் மலாக்கா சுற்றுலாத்துறைத் தூதராக நியமனம் செய்யப்பட்டிருந்த பாலிவுட் நடிகர் ஷாருக் கான், இந்திய சுற்றுலாப் பயணிகளை மலேசியாவிற்குக் கொண்டு வரத் தவறிவிட்டதால், கபாலியில் நடித்த ரஜினிகாந்தை சுற்றுலாத்துறை தூதராக நியமிப்பதில் உங்களின் கருத்து என்ன?” என்று சிம் கேள்வி எழுப்பினார். “அவர் மிகவும் புகழ்பெற்றவர் மற்றும் ஷாருக் கான் அவ்வளவாக செயல்படவில்லை” என்றும் சிம் குறை கூறினார்.

அதற்குப் பதிலளித்த நஸ்ரி, “சுற்றுலாத்துறை தூதராக நியமனம் செய்ய நாம் அவரைத் தொடர்பு கொள்ளலாம்” என்று தெரிவித்தார்.

இந்த பதவியை ரஜினி ஏற்பாரா என்பதெல்லாம் தெரியவில்லை. ஆனால் இந்த பதவிக்கு மலேசிய அரசு வெயிட்டான மரியாதைகளை வழங்கும் போல தெரிகிறது. முக்கியமாக ஒரு தூதர் பதவி வாங்கினால், ஒரு டத்தோ பட்டம் இலவசம் என்பதும் முந்தைய நடைமுறையாக இருப்பதால், விரைவில் ரஜினி ‘டத்தோ ரஜினி’ என்றும் அழைக்கப்படலாம்.

News Source - New Tamil Cinema dot com

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

சிறந்த ஆங்கிலத் திரைப்படங்கள், சிறந்த வெளிநாட்டுமொழிப்படம், சிறந்த ஆவணப்படம், சிறந்த அனிமேஷன் படம் உள்ளிட்ட 24 பிரிவுகளின் கீழ் ஆஸ்கர் விருதுகளை வழங்கி வருகிறது ஆஸ்கர் அகாடெமி.

சுவிற்சர்லாந்தின் நியோன் நகரில் நடைபெறும் Vision du Reel சர்வதேச ஆவணத்திரைப்பட விழாவில், இம்முறை சிறந்த முழு நீள ஆவணத் திரைப்படத்திற்கான விருதை பெற்றுக்கொண்டது இத்தாலிய திரைப்படமான Punta Sacra.

இயற்கை தன் கரங்களை அகல விரித்து ஆட்சி செய்யும் அற்புதமான கொடைக்கானல் எனும் இடத்தை களங்கப்படுத்தும் கதைக் களம். கதாநாயகி ரிதம் (கீர்த்தி சுரேஷ் ) 7 மாதம் கர்ப்பமாக இருக்கிறார். 6 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன தனது மகன் அஜயை நினைத்து கவலைப்படுகிறார்.

"உங்கள் கனவை எங்கள் ஜம்போவின் காதில் கிசுகிசுக்கவும், யாருக்கு தெரியும், அது நனவாகும்! " எனக் கட்டியம் கூறியவாறு, மாணவர்கள் மத்தியில் சிறுகதை எழுதும் ஆர்வத்தினை ஏற்படுத்த முனைகிறது ஆம்பல், சிறுகதைப்போட்டி.

உலகிலேயே மிக சிக்கலான மற்றும் மிகப் பெரும் எந்திரம் அல்லது கருவி ஜெனீவாவில் அமைந்துள்ள LHC எனப்படும் 27 கிலோமீட்டர் சுற்றளவு கொண்ட நிலக்கீழ் துகள் முடுக்கி கருவி (Particle accelerator) ஆகும்.

சென்னை அசோக்நகரில் கணவர் தேவகுமாரன், இரு மகள்களுடன் வாழ்த்து வந்த தேவயானி தற்போது தனது கணவரின் சொந்த கிராமத்துக்குப் போய்விட்டார்.

ஊரடங்கு நீடித்திருக்கும் நிலையில் யோசுவா ஆரோன் எனும் யூடியூப் இசைப் பிரபலம் சூப்பர் சிங்கர் பாடகர்களை ஒருகிணைத்து