திரைச்செய்திகள்

எப்ப பார்த்தாலும் மு.க.ஸ்டாலின், ஓ. பன்னீர்செல்வம் என்று திட்டுவதற்கு ஒரே திசையை தேர்வு செய்து வைத்திருந்த சசிகலா அதிமுகவுக்கு சரியான பொழுதுபோக்காக சிக்கிவிட்டார் கமல்.

சின்னஞ்சிறு பேச்சாளர்கள் தொடங்கி மந்திரிமார்கள் வரை “கமலுக்கு பாடம் கற்பிக்க வேண்டும். அவர் நடிப்பதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். கமலுக்கு அறிவு வேண்டும். மூளை வேண்டும். கிட்னி வேண்டும்” என்றெல்லாம் கொக்கரிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

அதற்கு காரணம் கமல் சொன்ன ஒரு படீர் திடீர் விஷயம்தான். “ஆட்சிய உடனே கலைச்சுட்டு எலக்ஷன் வைக்கணும்” என்பது கமலின் கருத்து!

கமல் இவ்வளவு கோபப்பட என்ன காரணம்? ஒரு தனியார் தொலைக்காட்சியில் அவர் அளித்த பேட்டியில் புட்டு புட்டு வைத்தார் அந்த பிளாஷ்பேக்கை. “என்னுடைய விஸ்வரூம் படத்தின் போது இவங்க பண்ணுன பிரச்சனையால் எனக்கு 52 கோடி ரூபாய் நஷ்டம். எந்த முஸ்லீம் அமைப்பும் விஸ்வரூபத்திற்கு எதிரா பிரச்சனை செய்யல. இதே வீட்டில் எனக்காக அவங்க துவா பண்ணிட்டு போனாங்க. வேற வழியில்ல. நாங்க என்ன பண்ணுறது? என்றும் வருந்தினார்கள். முஸ்லீம் அமைப்புகளின் பெயரில் அன்றைக்கு பிரச்சனை செய்தது ஜெயலலிதாதான்” என்றார் துணிச்சலாக!

சும்மா கிடந்தவரை தூண்டிவிட்டு, இன்னும் என்னவெல்லாம் பேச வைக்க போறங்களோ?

News Source - New Tamil Cinema dot com

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

தமிழ் சினிமாவில் உயரமான நடிகர்கள் பலர். அவர்களில் சத்தியராஜ், விஷால் ஆகிய இருவரையும்விட உயரமானவர் நெப்போலியன்.

சுவிற்சர்லாந்தின் நியோன் நகரில் நடைபெறும் Vision du Reel சர்வதேச ஆவணத்திரைப்பட விழாவில், இம்முறை சிறந்த முழு நீள ஆவணத் திரைப்படத்திற்கான விருதை பெற்றுக்கொண்டது இத்தாலிய திரைப்படமான Punta Sacra.

சில படங்கள் எல்லா காலத்துக்கும் பொருந்தக் கூடிய உண்மையை வெட்டவெளிச்சமாக்கிக் காட்டுபவை. வெற்றிமாறன் இயக்கத்தில் 2015-ல் வெளியான ‘விசாரணை’ திரைப்படத்தை, சாத்தான்குளம் அப்பா - மகன் படுகொலைகள் தூக்கமின்றி தவித்த நள்ளிரவில் நினைவூட்டின.

"உங்கள் கனவை எங்கள் ஜம்போவின் காதில் கிசுகிசுக்கவும், யாருக்கு தெரியும், அது நனவாகும்! " எனக் கட்டியம் கூறியவாறு, மாணவர்கள் மத்தியில் சிறுகதை எழுதும் ஆர்வத்தினை ஏற்படுத்த முனைகிறது ஆம்பல், சிறுகதைப்போட்டி.

உலகிலேயே மிக சிக்கலான மற்றும் மிகப் பெரும் எந்திரம் அல்லது கருவி ஜெனீவாவில் அமைந்துள்ள LHC எனப்படும் 27 கிலோமீட்டர் சுற்றளவு கொண்ட நிலக்கீழ் துகள் முடுக்கி கருவி (Particle accelerator) ஆகும்.

சாருஹாசன் நடித்து கடந்த வருடம் வெளியாகி ஓரளவுக்கு வசூலும் செய்த படம் தாதா 87. இப்படத்திற்கு விஜய் ஸ்ரீ கதை, திரைக்கதை,வசனம் எழுதி இயக்கியிருந்தார்.

ஊரடங்கு நீடித்திருக்கும் நிலையில் யோசுவா ஆரோன் எனும் யூடியூப் இசைப் பிரபலம் சூப்பர் சிங்கர் பாடகர்களை ஒருகிணைத்து