திரைச்செய்திகள்
Typography

70 ஆண்டு கால தமிழ் திரையிசை வரலாற்றில் எச்எம்வி, எக்கோ நிறுவனங்கள்
பெரும் லாபம் சம்பாதித்துள்ளன என்று, திரைப்படத் தயாரிப்பாளர் கலைப்புலி
தாணு கூறியுள்ளார்.

கலைப்புலி தாணு கூறுகையில், 70 ஆண்டு கால தமிழ் திரையிசை வரலாற்றில் கேவி
மகாதேவன், எம்எஸ்வி, இளையராஜா ஆகியோரின் பல ஆயிரக்கணக்கான பாடல்களை
விற்று பெரும் லாபம் சம்பாதித்து வரும் எச்எம்வி, எக்கோ நிறுவனங்கள் மீது
நாங்கள் வழக்குத் தொடர்ந்திருக்கிறோம். இளையராஜாவும் தொடர்ந்துள்ளார்.

இவர்களிடமிருந்து வரும் காப்புரிமைத் தொகையில் 50 சதவீதம்
தயாரிப்பாளர்களுக்கே என இளையராஜா அறிவித்துள்ளார். இந்த வழக்குக்கான
நீதிமன்றச் செலவைக் கூட இளையராஜாதான் செலுத்தியுள்ளார்.
தயாரிப்பாளர்களின் நலனுக்காக இவ்வளவையும் செய்துள்ளார் அவர். இந்த
வழக்கில் நாங்களும், இளையராஜாவும் நிச்சயம் வெற்றி பெறுவோம். அப்படி
வெற்றிப் பெறும்போது நிச்சயம் அறிவித்தபடி ரூ 50 கோடியைத்
தயாரிப்பாளர்களுக்குத் தருவார் இளையராஜா.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்