திரைச்செய்திகள்
Typography

தேசிய விருதுக்கு தயாராகிறார் உதயநிதி என்று வேண்டுமானால் இந்த செய்திக்கு தலைப்பு வைத்துக் கொள்ளலாம்.

ஒருபுறம் அரசியல் வானத்தில் மின்னலடிக்கும் சூழ்நிலை அவருக்கு வந்து கொண்டிருக்க... இன்னொருபுறம் நல்ல நல்ல படங்களில் நடித்து பெயர் வாங்க வேண்டும் என்கிற எண்ணமும் அவர் மனதில் மின்னலடிக்க ஆரம்பித்துவிட்டது.

பிரபல இயக்குனர் பிரபுசாலமன் இயக்கத்தில் நடிக்கப் போகிறாராம். இந்தப்படம் முழுக்க முழுக்க பாலைவனப் பகுதிகளில் நடக்கவிருக்கிறது. சும்மாவே ஏ.சி யை விட்டு நகராத ஹீரோக்கள், இதுபோல பாலைவன கதைகள் என்றால் பக்கத்திலேயே வர மாட்டார்கள். ஆனால் உதயநிதி நான் வர்றேன் என்றாராம். மளமளவென வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன.


BLOG COMMENTS POWERED BY DISQUS