திரைச்செய்திகள்
Typography

கிட்டத்தட்ட நாலரை கோடி சம்பளம் கேட்கும் ராஜ்கிரணை வேறொரு மாதிரி பேசி வளைக்க ஆரம்பித்திருக்கிறார்கள் சினிமாக்காரர்கள்.

பாதி சம்பளம். மீதியை பட வியாபாரத்தின் பர்சன்ட்டெஜ் கணக்கில் வாங்கிக் கொள்ளுங்க என்று ஐடியா கொடுக்க... அதுவும் சரிதான் மனநிலைக்கு வந்துவிட்டார் அவர். இது ஒருபுறமிருக்க... கடந்த சில தினங்களுக்கு முன் வந்து போன அவரது பிறந்தநாளே ராஜ்கிரணின் மார்க்கெட் வேல்யூவை உணர்த்தியது.

ஆர்ப்பாட்டமில்லாமல் நடந்த அந்த பிறந்த நாள் விழாவில், தமிழ்சினிமாவின் முக்கிய இயக்குனர்கள் பலர் கலந்து கொண்டார்கள். இவ்ளோ சம்பளம் வாங்குறாரே... அடுக்குமா? என்று அங்கு ஒரு இயக்குனர் முனக ஆரம்பிக்க... அவரு எந்த காலத்திலேயோ டிஸ்ரிபியூட்டர்களுக்கு வைத்த கடன் பாக்கியைதான் இன்னும் அடைத்துக் கொண்டிருக்கிறார்.

வாங்குகிற சம்பளத்தில் முக்கால்வாசி வட்டிக்கும் அசலுக்குமே போய்விடுகிறது என்று கூறி அவரது முணுமுணுப்பை அடக்கினாராம் இன்னொருத்தர்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்