திரைச்செய்திகள்

தமிழக அரசியல்வாதிகளின் பொய்களை நம்பி ரஜினியின் இலங்கை பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது என்று ரஜினியின் இலங்கை பயணத்திற்கு ஏற்பாடு செய்த லைக்கா நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

ரஜினியின் வருகையின்போது மேலும் பல நலத்திட்டங்களை தொடங்க இருந்தோம் என்றும் தொழில் போட்டியாளர்களும் கட்டுக் கதைகளை பரப்பினர் என்றும் லைக்கா நிறுவனம் கூறியுள்ளது. சுயலாபத்திற்காக சிலர்பரப்பும் வதந்திகளை அரசியல்வாதிகள் ஆதரிக்கின்றனர் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது