திரைச்செய்திகள்

இந்திய திரையுலகமே ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கும் பாகுபலி-2, இசை
வெளியீட்டு விழா, ஐதராபாத்தில் பிரமாண்டமாய் நடந்தது.

பாகுபலி படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம்
இன்னும் பிரமாண்டமாய் உருவாகி உள்ளது. இந்திய சினிமாவையே வியக்க வைத்த
பாகுபலி படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியிடப்பட்டு உலகளவில் டிரெண்ட்
ஆனது

மேலும் இப்படம் உலகின் டாப்-10 டிரைலர்களிலும்
இடம்பெற்றுள்ளது.இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா,
ஐதராபாத்தில் உள்ள ராமோஜி ஸ்டுடியோவில் நடந்தது. இந்தியத் திரையுலகில் பல
புதிய தொழில்நுட்பங்களை பாகுபலி குழுவினர் அறிமுகப்படுத்தி வருகிறார்கள்.
அந்தவகையில், இப்படத்தின் இசை வெளியீடு ஐதராபாத்தில் பிரம்மாண்டமாக
நடைபெற்றது. இந்த பிரம்மாண்ட நிகழ்ச்சியை முதல் முறையாக 360 டிகிரி
கோணத்தில், 4 கே-வில் ஔிப்பரப்பினார்கள். யூ-டியூப்பில் நேரடியாக
ஔிப்பரப்பட்ட இந்த நிகழ்ச்சி 360 டிகிரி கோணத்தில் பார்க்க
முடிந்தது.இந்த இசை வௌியீட்டு நிகழ்ச்சியில் பிரபல ஹிந்தி பட இயக்குநர்
கரண் ஜோகர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

இவர்களுடன் ராஜமௌலி, பிரபாஸ், ராணா, தமன்னா, அனுஷ்கா, சத்யராஜ், ரம்யா
கிருஷ்ணன், நாசர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.