திரைச்செய்திகள்

கிட்டத்தட்ட பத்து படங்களை கையில் வைத்திருக்கும் ஜி.வி.பிரகாஷுக்கு போன வாரம் கெட்ட வாரம்.

அவரது புருஸ்லீ படம் திரைக்கு வந்து முதல் காட்சியிலேயே பலரை ஐயோ தியோ என்று அலற வைத்தது. ஏன்யா... இந்தாளு வர்ற சம்பளத்தை வாய் கிழிய பேசி வாங்கிப் போடுறதுலேயே குறியா இருப்பாரு போலிருக்கு. கதை என்ன, கான்சப்ட் என்னன்னு கூட கேட்க மாட்டாரு போலிருக்கு என்று வறுத்தெடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். என்னை சுற்றி பாசிட்டிவா பேசுற ஆளுங்க மட்டும்தான் இருக்கணும் என்று கூறி கூறி, அட்வைஸ் பண்ணும் ஆட்களை விரட்டியடித்த ஜி.வி. இந்தப்படத்தின் ரிசல்ட் விஷயத்தையும் அப்படியே எடுத்துக் கொண்டதுதான் அடக்கடவுளே சமாச்சாரம். படம் ரொம்ப சுமார்னு பேச ஆரம்பிச்சாலே, போறீங்களா மூடிகிட்டு என்று கூறி வருகிறாராம் இப்போதும். உருப்ட்ருவீங்க தம்பி...