திரைச்செய்திகள்

ரஜினியின் 2.0 சேட்டிலைட் வியாபாரம் 110 கோடியில் முடிந்ததை ஆச்சர்யம் விலகாமல் கவனிக்கிறது ஒட்டுமொத்த இந்தியாவின் சினிமா மார்க்கெட்.

இந்த நிலையில் அவரது கபாலி 2 படத்தில் ஹீரோயினாக நடிக்க வித்யாபாலனும், தீபிகா படுகோனும் தயாராக இருக்கிறார்கள்.

இதில் யாருக்கு அட்வான்ஸ்? இதுதான் பெரும் குழப்பம். ரஜினியே முடிவு சொல்லட்டும் என்று காத்திருக்கிறார்கள்.

ஆனால் அவரது அன்பு மகள்கள் சிலபல அபிப்ராயம் வைத்திருக்கிறார்களாம் இந்த விஷயத்தில். ஏற்கனவே கோச்சடையான் படத்தில் நடிக்க வந்தார் தீபிகா.

முதல் நாள் ஷுட்டிங்கிலேயே அப்பாவுக்கு உடல் நிலை மோசமானது. அதற்கப்புறம் அதிலிருந்து அவர் மீள பல மாதங்கள் ஆச்சு.

சரி... கொடுத்த பணத்திற்கு அதே தீபிகாவை வைத்து தயாரான அனிமேஷன் படத்தின் ரிசல்ட்? உலகமே அறிந்ததுதான்.

மறுபடியும் தீபிகாவா? என்று திகைப்பதால், வித்யாபாலனுக்கே வெற்றி வாய்ப்பு என்கிறது ரகசிய சோர்ஸ். ஒரு முடிவு எங்கெல்லாம் டிராவல் ஆகுது!?