திரைச்செய்திகள்
Typography

ஆர்யா, விஷால் பிரண்ட்ஷிப்புதான் கோடம்பாக்கத்தில் விசேஷம். இந்த நட்பு வட்டத்திற்கு சற்று லேட்டாக இணைந்து கொண்டவர் ஜீவா.

இப்போது இந்த கூட்டணியில் பெரும் டமார். விஷாலுடன் ஆர்யாவும் சரி, ஜீவாவும் சரி. சேர்வதே இல்லை. வார இறுதி நாட்களில் கூடி கும்மாளமடித்து வந்தார்களே... அதுவும் இல்லை. இந்த நட்பு எங்கு விரிசல் விட்டது? எப்படி உடைந்து சுக்கு நூறானது என்று விசாரித்தால், எல்லாம் துட்டு விவகாரத்தில்தான் வந்து முடியும் போலிருக்கிறது. மார்க்கெட் இல்லாத ஆர்யாவுக்கு, தன்னை வைத்து விஷால் ஒரு படத்தை தயாரித்தலென்ன என்று தோன்றியதாம். அது தொடர்பான பேச்சு வார்த்தைகளில் லேசாக அனல் அடிக்க, சைலன்ட்டாக ஒதுங்கிக் கொண்டாராம் அவர். ஜீவாவுக்கு என்ன பிரச்சனையோ? இவர்களின் கலகலப்பு பறி போனதில், பார்ட்டியில் ஓசியில் கலந்து வந்த சிலருக்கு பெருத்த நஷ்டம். ஹ்ம்... இப்பல்லாம் எல்லாத்தையும் காசு கொடுத்துதான் வாங்க வேண்டியிருக்கு என்று புலம்புகிறார்கள்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

கொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்