திரைச்செய்திகள்

ஏப்ரல் 11-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை ரசிகர்களை சந்திக்கிறார் நடிகர்
ரஜினிகாந்த்

நீண்ட நாட்களுக்கு பிறகு தமது ரசிகர்களை சந்திக்க உள்ளதாக நடிகர்
ரஜினிகாந்த் தெரிவித்தார். ரசிகர்களை சந்திப்பதில் எந்த வித அரசியலும்
இல்லை என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். ஏப்ரல் 11-ம் தேதி முதல்
16-ம் தேதி வரை ரசிகர்களை சந்திப்பேன் என்றும் அவர் தெரிவித்தார்.

ரசிகர்கள் தங்கள் ரஜினியை சந்தித்தால், அரசியலில் தலைமையேற்று நாட்டை வழி
நடத்த கோரிக்கை வைப்போம் என்று கூறிவரும் நிலையில், வெறும் புகைப்படம்
மட்டுமே எடுத்துக்கொள்ள உள்ளதாக ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.