திரைச்செய்திகள்

சித்தப்பா பெரியப்பா பசங்களுக்கு நடுவுல இப்படியொரு அட்டாச்மென்ட்டா? என்று வியக்கிற அளவுக்கு ஒண்ணுக்குள் ஒண்ணாகிக் கிடப்பது யுவன் சங்கர் ராஜா, வெங்கட்பிரபு பிரதர்ஸ்சுக்கு உண்டு!

இதில் வெங்ஸ் பிரதர்ஸ், பல நேரங்களில் ‘ட்ரிங்ஸ்’ பிரதர்களாகவும் இருப்பதால், “வேணாம்டா கெட்ட சகவாசம்” என்று பலமுறை யுவனுக்கு கடிவாளம் கூட போட்டிருக்கிறார்கள் வீட்டில்.

அதையும் உடைத்துக் கொண்டு கூட்டுப் பலகாரம் தின்றவர் யுவன். இந்த அன்பு மலர்களுக்குள்தான் இப்போது காட்டுத் தீயாக பரவிவிட்டது கசப்பு. இளையராஜா எஸ்.பி.பி பிரச்சனையில் எஸ்.பி.பி பக்கம் நின்று குரல் கொடுத்துவிட்டார் கங்கை அமரன். இதில் அப்செட் ஆன யுவன், பேச்சு வார்த்தையை முற்றிலும் நிறுத்திவிட்டாராம்.

யுவனின் மியூசிக் கூடத்தில் பிரேம்ஜிக்கு பின்னணி இசையமைக்க வாய்ப்பளித்து வந்த யுவன், அதை மீண்டும் தொடர்வாரா என்பதுதான் இப்போதைய டவுட்!