திரைச்செய்திகள்
Typography

கபாலி வெளியாகி எட்டாவது நாளில் சென்னையில் மட்டும் எட்டு கோடி வசூலாம்.

உலகம் முழுக்க 300 கோடி என்கிறார் தாணு. இந்த சாதனையை இதுவரை வந்த தமிழ் படங்களும் சரி, தெலுங்கில் வெளிவந்த பாகுபலியும் கூட முறியடிக்கவில்லை என்பதுதான் மேட்டர். (தாணு சொன்னது உண்மையாக இருந்தால் இது. இல்லையென்றால் ஹிஹி...) இதற்கிடையில் கபாலி தோல்விப்படம் என்று ஒரு பொது மேடையில் பேசிய வைரமுத்துவுக்குதான் செம டோஸ். ரஜினி ரசிகர்கள் கடிதம் மூலமும், வீசிய கற்கள் மூலமும் அதை செய்துவிட்டார்கள். அட இது எப்போ? யெஸ்... அவருக்கு சொந்தமான கல்யாண மண்டபத்திற்கு முன் திடீரென்று வந்து நின்ற ஆட்டோ ஒன்றிலிருந்து சரமாரியாக கற்கள் வீசப்பட்டனவாம். எதுக்கு போலீஸ்ல சொல்லி பிரச்சனையை பெரிசாக்கணும் என்று அமைதியாக இருந்துவிட்டாராம் வைரம். கபாலி சக்சஸ் மீட்டில் குவிந்திருந்த மீடியா, வைரமுத்துவின் கருத்து குறித்து தாணுவிடம் கேட்க முயல, “அட... அத விடுங்க. அதுக்கெல்லாம் பதில் சொல்லிகிட்டு இருக்கணுமா?” என்று இடத்தை காலி பண்ணினார் தாணு. மொக்கை பிளேடும், முகச்சவரமும் என்னைக்கும் இனிமையா இருந்ததா சரித்திரமே கிடையாது. 

Rajinikanths Kabali Success Press Meet Photos

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்