திரைச்செய்திகள்
Typography

மைலாப்பூர் திருவள்ளுவர் சிலைக்கு அருகிலிருக்கிறது அந்த ஷுட்டிங் ஹவுஸ். பெரும்பாலும் டி.வி சீரியல்களின் படப்பிடிப்புதான் அங்கு நடக்கும்.

சில தினங்களுக்கு அங்கு ஒரே களேபரம்! என்னவாம்? பிரபல தொலைக்காட்சி சீரியலின் கதாநாயகி ஒருவர் உடைமாற்றிக் கொண்டிருந்தார். வழக்கமாக எல்லாரும் உடை மாற்றும் அறைதான் அது. நல்லவேளையாக யாரோ தன்னை கவனிப்பது போல உள்ளுணர்வு சொல்ல, சுற்றும் முற்றும் தேடியவர், இரண்டு கால்கள் ஒரு மறைவுக்கு பின்னாலிருப்பதை கண்டாராம்.

பாய்ந்து சென்று பிடித்தால், செல்போனும் அதில் சுட்டுக் கொண்டிருந்த கேமிராவுமாக ஒருவன். லபோ திபோ என்று கூச்சலிட்ட நடிகைக்கு பரிந்து வந்த யூனிட், சம்பந்தப்பட்டவனை பிரித்து மேய்ந்துவிட்டது. போலீசுக்கு போனால், தேவையில்லாமல் நடிகையின் பெயர் கெட்டுப் போய்விடும் என்பதால், எச்சரித்து அனுப்பியிருக்கிறார்கள்.

பலரது சந்தேகம் என்னவென்றால், அதே ஷுட்டிங் ஹவுசில்தான் ராதிகா, குஷ்பு போன்ற பெரிய நடிகைகள் நடித்த சீரியல்களும் படமாகின. அங்கு வந்த வாலிபனும் புதுசாய் வந்தவன் போல தெரியவில்லை. பிரச்சனை முற்றுவதற்குள் யாராவது உள்ளே வந்து தன்னார்வத்தோடு ஒற்றன் வேலை பார்த்தால் அந்த கள்ள எலி மறுபடியும் சிக்கும்!

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்