திரைச்செய்திகள்
Typography

ஔவையார் படத்தில் குரூப் டான்சராக ஆடியவர் ஜமுனா. இப்போது கிட்டதட்ட 80 வயதை தொட்டுவிட்ட அந்த மூதாட்டி, ஜெயலலிதா, சிவகுமார் போன்ற ஜாம்பவான்களுடன் சேர்ந்து நடித்தவர்.

ஆனால் ஐயகோ... குடும்பம் கைவிட்டுவிட்டது அவரை. வேறு வழியில்லாமல் வடபழனி கோவில் வாசலில் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறார். இந்த தகவலை விஷால் காதுக்கு கொண்டு போனார் பத்திரிகையாளர் ஒருவர். அவ்வளவுதான்... நேரடி ஆக்ஷனில் இறங்கிய விஷால், உடனே அவருக்கு மாதந்தோறும் 2000 பெண்ஷன் வரும்படி ஏற்பாடு செய்து கொடுத்திருக்கிறார்.

கமல்ஹாசன் பத்து வருஷத்துக்கு முன்னாடி எனக்கு உதவியிருக்கார். இப்போது பல வருஷம் கழிச்சு விஷால் உதவியிருக்கிறார். சொந்தக் குடும்பம் கைவிட்டாலும், கலைக்குடும்பம் கை விடல என்று கலங்குகிறார் பாட்டி. இருந்தாலும் மாதம் 2000 என்பது மிக மிக சொற்ப தொகை. இதை கொடுத்துவிட்டுதானா இவ்வளவு பெரிய பப்ளிசிடி தேடிக் கொள்ளணும் என்று விஷால் மீது வெறுப்பாகிக் கிடக்கிறது கோடம்பாக்கம்.


BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்