திரைச்செய்திகள்
Typography

‘தர்மதுரை’ படத்தின் பாடலுக்காக தேசிய விருது வாங்கிவிட்டார் கவிப்பேரரசு வைரமுத்து.

இது ஏழாவது முறை. விருதுகள் தரப்படுகின்றனவா, பெறப்படுகின்றனவா என்கிற பட்டிமன்றம் ஒரு பக்கம் நடந்து வந்தாலும், இந்த சிக்கலுக்குள் தன் பாடல் சிக்கிக் கொள்ளாதளவுக்கு தரமாக எழுதுகிறவர்தான் அவர்.

இருந்தாலும் இந்த நல்ல நேரத்தில் ஒரு நெருடல். இந்த பாடலுக்கு தேசிய விருது கிடைத்ததற்காக சுமார் ஒரு டசன் சினிமாக்காரர்களுக்கு நன்றி சொன்ன வைரமுத்து, இயக்குனர் சீனு ராமசாமியை மறந்துவிட்டார்.

இது தற்செயலானதுதான் என்று சொல்ல வாய்ப்பில்லை. ஏனென்றால், குண்டூசி முனைக்கு கூர் தீட்டுவதென்றால் கூட, அதை ஒத்திகை பார்க்காமல் செய்யக் கூடியவரல்ல கவிஞர். பிறகெப்படி? இந்த சந்தேகம்தான் சீனுராமசாமிக்கும். அப்புறம்? இனி சீனுவின் விரல்கள் வைர மோதிரம் அணியாது என்பதுதான் இப்போதைய கிசுகிசு!