திரைச்செய்திகள்

தமிழில் மட்டுமல்ல, வேறெந்த மொழிகளிலும் கூட ஒரு வாய்ப்பும் இல்லாமல் மழையில் நனைந்த கோழி போலாகிவிட்டது ஹன்சிகாவின் மார்க்கெட்.  

இவ்வளவு நடந்த பிறகும் ஒரு விஷயத்தில் தெறிக்க விடுகிறார் ஹன்சிகாவின் அம்மா. வேறொன்றுமில்லை... சிம்பு நடிக்கும் புதிய படத்தில் இரண்டு ஹீரோயின்கள். ஒருவர் ஸ்ரேயா. அந்த இன்னொருவர் யார் என்று திக்கெட்டும் திரிகிறது இயக்குனர் தரப்பு. எதற்கும் கேட்டு வைப்போமே என்று ஹன்சிகா மம்மிக்கு கால் அடிக்க, அவர் கையை தூக்கிக் கொண்டு அடிக்க வராத குறை என்கிறது ரகசிய தகவல்கள். படமே இல்லாட்டியும் வீட்ல சும்மாயிருப்போம். அவரு படத்தில் என் பொண்ணு நடிக்க மாட்டா என்று உறுதியாக கூறிவிட்டாராம். ஆனால் மகளுக்கு அம்மாவின் பதிலில் உடன்பாடு இல்லை என்கிறார்கள்.

விரைவில் கூட்டை விட்டு கிளி பறக்கலாம். அதற்கப்புறம்தான் கிளியை ஸ்கேன் பண்ணி விதவிதமாக துன்புறுத்துவற்தகாகவே பிறப்பெடுத்த மீடியா இருக்கிறதே... வாம்மா. வந்து விழு!