திரைச்செய்திகள்

பா.ரஞ்சித் இயக்கவிருக்கும் படத்திற்காக நடிகர் சூர்யா பாக்சிங் பயிற்சியில் ஈடுபட்டு வருவதாக ஒரு டூபாக்கூர் தகவல் இணையத்தில் பரவி வருகிறது.

நான் பாக்சிங் கதையில் நடிக்கப் போவதில்லை என்று சூர்யா வெளிப்படையாக கூறியே பல வாரங்கள் ஆகிவிட்ட நிலையில் இப்படியொரு செய்தி எப்படி? அதுதான் பலருக்கும் புரியவில்லை. பா.ரஞ்சித் சூர்யா கூட்டணியே டமால் ஆகிவிட்டதாக இன்டஸ்ட்ரி கூறிவரும் நிலையில், இந்த செய்தி திட்டமிட்டு பரப்பப்படுகிறதோ என்ற சந்தேகத்தையும் எழுப்புகிறார்கள் இங்கே. இல்லை என்றோ ஆமாம் என்றோ வெளிப்படையாக பதில் சொல்ல வேண்டிய மிஸ்டர்கள் இருவரும், பலத்த மவுனத்தில். ஆனால் என்னமோ நடக்குது? அதுமட்டும் சந்தேகமேயில்லாமல் புரியுது!