திரைச்செய்திகள்
Typography

கோடம்பாக்கத்தின் கோப வாய்களில் ஒன்று மன்சூரலிகானுக்கு இருக்கிறது. இவர் ஏறுகிற எல்லா மேடைகளிலும் மோடியையும் எடப்பாடி பழனிச்சாமியையும் தொடர்ந்து விமர்சித்தே வருகிறார்.

மத்திய அரசையும் மாநில அரசையும் இப்படி மனம் போனபடி வர்ணிக்கும் அவரால் சம்பந்தப்பட்ட சினிமா கம்பெனிகள் சங்கடத்துக்கு ஆளாகுமோ என்கிற அளவுக்கு திகில் கிளப்பி வருகிறது அவரது பேச்சு.

இவர் வந்துவிட்டால் இப்படி ஏடா கூடமாக ஏதாவது நடக்கும் என்று நினைக்கும் பல சினிமா கம்பெனிகள் தங்களது ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு இவரை அழைப்பதேயில்லை.

அப்படியிருந்தும் சம்மன் இல்லாமல் ஆஜராகும் மன்சூரு, கண்டபடி பேசுவதை தயாரிப்பாளர் சங்கம் கண்டு கொள்ளுமா? இத்தனைக்கும் இவர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் வேறு?

Most Read