திரைச்செய்திகள்
Typography

சென்னையில் கடற்கரை ஓரம் அமைந்துள்ள அந்த நட்சத்திர ஓட்டலில் நயன்தாராவும் பிரபுதேவாவும் எதிர்பாராத விதத்தில் மீட் பண்ணிக் கொண்டார்கள்.

அப்புறம்? மணிக்கணக்கில் அதே ரெஸ்ட்ராரென்ட்டில் பேசினார்கள்.

அப்போது நயன்தாரா பொங்கி பொங்கி அழுதார் என்ற செய்தியை நாம் இதே பகுதியில் எழுதி நான்கு மாதங்கள் ஆகியிருக்குமா? அந்த சந்திப்பின் பலன் இப்போது பழமாக காய்த்து கிளைதாங்காமல் ஆடிக் கொண்டிருக்கிறது.

எப்படி? பிரபுதேவா நடிக்க, கார்த்திக் சுப்புராஜ் ஒரு படத்தை இயக்கப் போகிறார்.

இதில் நடிக்க கன்னடத்திலிருந்து ஒரு நடிகையை கொண்டு வந்தார் கா.சு. ஆனால் அவர் இவருக்கு கால்ஷீட் கொடுத்தது வேறொரு படத்திற்கு கொடுத்திருந்த தேதிகளை.

அப்புறம் என்ன? லடாய். மூக்குடைப்பு. அழுகை. விலகல்.

அவருக்கு பதிலாக நடிக்கதான் நயன்தாராவை கேட்டிருக்கிறார்களாம். பொண்ணு இன்னும் சரின்னு சொல்லல. ஆனால் சொன்னா  தப்பில்ல என்று சுற்றமும் நட்பும் சொக்குப் பொடி போடுது.

ஐயோ பாவம்... விக்னேஷ் சிவன்!

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்