திரைச்செய்திகள்
Typography

வரும் 30 தேதி தமிழ்சினிமா இன்டஸ்ட்ரி ஸ்டிரைக் என்று அறிவித்துவிட்டார் விஷால்.

ஆனால் இது தன்னிச்சையான முடிவு என்று ஒரு கூட்டம் அவருக்கு எதிராக போர்க்கொடி உயர்த்த ஆரம்பித்திருக்கிறது.

தியேட்டர்களை மூட மாட்டோம் என்று திரையரங்க உரிமையாளர்கள் சங்கங்களின் ஒரு பிரிவு முரண்டு பிடிக்க, படு சூடாக நகர்கிறது ஒவ்வொரு நாளும்.

இதில் திரையரங்க உரிமையாளர் சங்க தலைவர் அபிராமி ராமநாதன், “ஜெயலலிதா இருந்திருந்தால் இப்படி அறிவிச்சிருப்பீங்களா?

அவங்க இல்லேங்கிற தைரியத்தில்தான் இப்படி முடிவெடுக்கிறீங்களா?” என்று கேட்டு மேலும் குட்டையை குழப்பி வருகிறார்.

இதற்கிடையில் விஷால் கூட்டிய கூட்டத்தில் கலந்து கொண்ட சுமார் 400 தியேட்டர்காரர்கள் படங்களை திரையிட மாட்டோம் என்கிறார்கள்.

இந்த இடியாப்ப சிக்கலில் இருந்து இன்டஸ்ட்ரி மீளுமா? ஸ்டிரைக் நடக்குமா? ஸ்டிரைக் நடக்காமலேயே சலுகைகள் நிறைவேற்றப்படுமா? கேள்விகள்... கேள்விகள்...

Most Read