திரைச்செய்திகள்
Typography

சத்யராஜும் ரம்யா கிருஷ்ணனும் ஜோடியாக நடித்திருக்கும் ஒரு ஜவுளிக்கடை விளம்பரம் சமூக வலைதளங்களில் கடும் முணுமுணுப்பை ஏற்படுத்தி வருகிறது.

பாகுபலி 2 படு பயங்கர வசூலை குவித்து வரும் இந்த நிலையில் அதே படம் ஓடும் தியேட்டர்களில் இடைவேளையில் இந்த விளம்பரம் திரையிடப்படுவதால் ரசிகர்களுக்கும் கடும் குழப்பம்.

“பாப்கார்ன் வாங்கிட்டு வர்றதுக்குள்ள கட்டப்பாவும் ராஜமாதாவும் கள்ளக் காதலில் ஈடுபடுறாங்களேப்பா...” என்று 90 சதவீத தியேட்டர்களில் கமென்ட் அடித்து சிரிக்கும் ரசிகர்களால் படுபயங்கர அப்செட் ஆகிறார்கள் பாகுபலி சம்பந்தப்பட்டவர்கள்.

ஐந்து வருடங்களாக பாகுபலி எடுக்கப்பட்டு வருகிறது. கேரக்டர்களின் கண்ணியத்தை கெடுக்கும் விதத்தில் இப்படியொரு விளம்பரத்தில் நடித்திருக்கிறார் சத்யராஜ்.

இது சரியா சார்? என்று கேள்விகளால் துளைத்தெடுக்கிறது பாகுபலி ரசிகர்களின் மனசு.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்