திரைச்செய்திகள்
Typography

தனுஷ் வழியில் சிம்புவா? சிம்பு வழியில் தனுஷா? என்றொரு பட்டிமன்றம் வைத்தால், முடிவை சொல்வதற்குள் மூச்சடைத்து விழுந்துவிடுவார் நடுவர்.ஏனென்றால் எல்லா விஷயத்திலேயும் இருவருக்கும் கடும் போட்டி.

(அதில் வெளியில் சொல்ல முடியாத போட்டிதான் நிறைய) ஆனால் இந்த நிமிஷம் வரைக்கும் தனுஷுக்குதான் ரேசில் முதல் இடம் என்பது யாவரும் அறிந்ததே.
 
இந்த நிலையில்தான் மாரி படத்தில் தனுஷ் பண்ணிய தவறை, தவறென்று தெரிந்தே செய்திருக்கிறார் சிம்பு.
 
‘மாரி’ படத்தில் வாயில் சுருட்டு புகைப்பது போல ஒரு போஸ்டர் அடித்திருந்தார் தனுஷ். உடனே அவருக்கு சமூக வலைதளங்களிலும் நேரிலும் பல சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் வைக்க... “ஸாரி.இனிமே நடக்காது” என்று விளம்பரங்களில் அத்தகைய ஸ்டில்களை தவிர்த்தார் தனுஷ்.
 
அதே போல பலரும் தன் வீட்டிலும் வந்து நிற்க வேண்டும் என்று சிம்பு எதிர்பார்த்திருப்பார் போலும். ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ பட போஸ்டரில் அவர் தம் அடித்துக் கொண்டிருப்பதை போல ஸ்டில்கள் வெளியாகி வருகிறது. கேட்டால், ‘சிம்பு தமிழன்டா...’ என்று பொங்குவார் டிஆர்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

கொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்