திரைச்செய்திகள்
Typography

உலகமே பாராட்டி வரும் பாகுபலி 2 படத்தை பாராட்டாதவர்களே இல்லை. ரஜினி ஒருமுறை இப்படத்தை தனது வீட்டிலேயே இருக்கும் தியேட்டரில் பார்த்து ரசித்ததுடன், மாறுவேடத்தில் தியேட்டருக்கு போய் பெரிய திரையிலும் பார்த்து ரசித்ததாக கூறப்படுகிறது.

ஆனால் இந்தப்படம் பற்றி மூன்று வாரங்கள் கழித்துதான் வாய் திறந்திருக்கிறார் கமல். ‘வெறும் கிராபிக்ஸ் குதிரைகளுக்காக பாராட்டுவதா?’ என்று கவலைப்பட்டிருக்கும் அவர், ‘இதெல்லாம் ஒரு படமா?’ என்ற ரேஞ்சில் விமர்சித்திருப்பதுதான் பலருக்கும் அதிர்ச்சி. இப்படத்தை “நல்லாயில்ல” என்று சொன்ன இன்னொரு நபர் மன்சூரலிகான் என்பதை இந்த நேரத்தில் நினைவுபடுத்தினால், கமலே கூட தன் சொல்லை வாபஸ் பெறக்கூடும்!

BLOG COMMENTS POWERED BY DISQUS