திரைச்செய்திகள்

நடிகைகளின் கனவுகளை கொலை செய்வது சரியல்ல என்று நடிகை பிரியாமணி அமலாபாலுக்கு ஆதரவளிக்கும் வகையில் கருத்துத் தெரிவித்துள்ளார். 

நடிகை அமலாபால், இயக்குனர் ஏ.எல்.விஜய் திருமணம் முறிவுக்கு வந்துள்ள நிலையில், அமலாபால் தொடர்ந்து நடிக்க விடும்பியதாகவும், இதற்கு கணவர் விஜய் சம்மதிக்கவில்லை என்றும்,எனவேதான் விவாகரத்து செய்ய உள்ளனர் என்றும் ஒரு தகவல் வெளியானது. இதுக் குறித்துத்தான் பிரியாமணி அமலாபாலுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மேற்கண்ட கருத்தைத் தெரிவித்துள்ளார். மேலும், சமூகத்துக்காக நடிகைகளின் கனவுகளை கொலை செய்வது சரியல்ல என்றும் தெரிவித்துள்ளார். 

ஆனால்,இதற்கு பதில் அளிக்கும் வகையில் இயக்குனர் ஏ.எல்.விஜய் அளித்திருக்கும் விளக்கம் இருக்கிறது. அமலாபால் திருமணத்துக்குப் பிறகும் நடக்க விரும்பினார் என்பதால்தான், தாம் அவர் நடிக்க எதிர்ப்பு ஒன்றும் தெரிவிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார். திருமண வாழக்கையில் உண்மை, நேர்மை இல்லாவிடில் வாழ்வைத் தொடர்வது என்பது கடினம் என்றும், தாமும், அமலாபாலும் பிரிந்ததற்கான உண்மை தமக்கு மட்டுமே தெரியும் என்றும் அவர் கூறியுள்ளார். அதோடு, அமலாபாலை பிரியும் வலியை மனதில் சுமந்துக்கொண்டுதான் தாம் இந்த திருமண முறிவுக்கு சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் ஏ.எல்.விஜய் தெரிவித்துள்ளார்.