திரைச்செய்திகள்
Typography

எத்தனை முறை கையை சுட்டுக் கொண்டாலும், பர்னால் போட்டுக் கொண்டு மறுபடியும் கோதாவில் குதிக்கிற தைரியம் ஒரு சிலருக்குதான் வரும்.

அந்த ஒரு சிலரில் ஒருவராகிவிட்டார் விஜய் சேதுபதி. தன் நண்பருடன் பார்ட்னராக சேர்ந்து இவர் தயாரித்த ஆரஞ்சு மிட்டாய் படம், ஆரஞ்சு சுளையளவுக்கு கூட பிரயோஜனம் தரவில்லை அவருக்கு.

பெருத்த நஷ்டம். இந்த கொடுமைக்கு மேற்படி படத்தை தமிழகம் முழுக்க ரிலீஸ் பண்ணியதும் அவர்களேதான்.

தற்போது அதே நண்பரோடு இணைந்து இன்னொரு படத்திற்கும் பணத்தை கொட்ட முடிவு செய்துவிட்டார் வி.சே. இந்தப்படத்தையாவது கமர்ஷியல் தரத்தோடு தயாரிங்க பசங்களா என்று தியேட்டர் வட்டாரம் கடிதம் எழுதி வருகிறதாம் அவரது அலுவலகத்திற்கு.

பிரிச்சு படிச்சுருப்பாருன்றீங்க?

BLOG COMMENTS POWERED BY DISQUS