திரைச்செய்திகள்
Typography

‘கபாலி படத்தின் வசூலை வைத்து கனரா பேங்கையே வாங்கிடலாம்’ என்கிற அளவுக்கு அந்த படம் ஓடிக் கொண்டிருந்த நேரத்தில் பில்டப் கொடுக்கப்பட்டதை யாரும் மறந்திருக்க முடியாது.

நிஜம் அதுவாகவே இருக்கட்டும்... அந்த படத்திற்காக ஒரு வெற்றிவிழாவை நடத்தி, சரித்திரத்தில் சிலை வடித்திருக்கலாம் அல்லவா?

அதுதான் இன்று வரை நடக்கவேயில்லை. ஏன் நடக்கவில்லை என்பது முக்கியமில்லை.

ஏதாவது ஸ்பெஷல் காரணம் இருந்திருக்கலாம். அதை சொல்ல முடியாமல் கூட இருந்திருக்கலாம். ஆனால், இப்படியொரு விழா நடக்கவில்லையே என்கிற ஏக்கம் ரஜினிக்கு இருப்பதாக கிசுகிசுக்கிறது இன்டஸ்ட்ரி.

அவருக்கு இருக்கிற அந்தஸ்துக்கு அவரே போய், “விழா ஒண்ணு எடுக்கலாம்” என்று கேட்கவா முடியும்? தானே புரிந்து தானே நடக்கிற விஷயம்தானே அது?  விஷயத்தை போட்டு உடைச்சாச்சு.

விழா எடுத்தாலும் சரி. விழாமல் எடுத்தாலும் சரி. நம்ம கடமை அம்புட்டுதேன்!

BLOG COMMENTS POWERED BY DISQUS