திரைச்செய்திகள்

அபியும் நானும், மொழி மாதிரியான அற்புத படங்களை இயக்கிய ராதாமோகன், இப்போது முழி பிதுங்கிக் கிடக்கிறார்.

தமிழ்சினிமாவின் ட்ரெண்ட் மாறிவிட்டதுதான் காரணம். அவர் ஸ்டைல் கதைகளை மக்கள் விரும்பவில்லையோ என்னவோ? அவரது சமீபத்திய சில படங்கள் குப்புற விழுந்து பல்லை பெயர்த்துக் கொண்டதை நாடறியும். ஆனால் அவர் அறிந்தாரா என்பதுதான் டவுட். தொடர்ந்து அதே மாதிரி ஆர்ப்பாட்டமில்லாத வாழ்வோடு ஒன்றிய இன்னொரு கதையோடு படம் பண்ண கிளம்பிவிட்டார். மலைஜாதி மக்களின் உணர்வுகளை சொல்வதுதான் இந்த புதிய படத்தின் நாட். இதில் ஹீரோவாக நடிக்கப் போகிறவர் அருள்நிதி! கழக குடும்பத்திலிருந்து வந்தாலும், கலைக்கு முக்கியத்துவம் தருவதில் அக்கறையோடு இருக்கும் அருள்நிதி, இதுவரை நடித்த படங்கள் எதுவும் காமா சோமா ரகம் இல்லை என்பதே தனியாக கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விஷயம்தானே? ராதாமோகன் இவரை உயர்த்துகிறாரா? அல்லது ராதாமோகனை இவர் கவிழ்க்கிறாரா? கவுண்ட்டவுன் ஸ்டார்ஸ்....