திரைச்செய்திகள்
Typography

விஜய்யின் ஒண்ணுவிட்ட தம்பிதான் விக்ராந்த்.

ஆரம்பத்தில் ஹீரோவாக அறிமுகமானவருக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைப்பதே அபூர்வம் என்றாகிவிட்ட நிலையில், தனது அண்ணன் படங்களிலாவது கேரக்டர் ரோல் கிடைக்கும் என்று காத்திருந்தாராம்.

ஆனால் எதுவும் நடக்கவில்லை.

அண்ணனும் சிபாரிசு செய்யவில்லை. காலம் மாறியது.

அடுத்தடுத்த ஹீரோக்களுடன் நட்பு கொள்ள ஆரம்பித்த விக்ராந்த், அவர்களை எளிதில் கவர்ந்துவிட்டார்.

பாண்டிய நாடு படத்தில் விஷால் மிக முக்கியமான ரோல் கொடுத்து விக்ராந்தின் அந்தஸ்தை மேலும் உயர்த்தினார்.

“அண்ணனாவது ஒண்ணாவது. இனிமே விஷால்தான் என் அண்ணன்” என்று ஓப்பன் பேட்டியளித்தார் விக்ராந்த்.

தற்போதைய ரிசல்ட் என்ன? அண்ணன் தம்பி குடும்பங்கள் இரண்டும் பேச்சு வார்த்தையையே கட் பண்ணிவிட்டார்களாம்.

இதுவும் விஷலால் வந்தது என்று குற்றம் சாட்டாமலிருந்தால் பெரிய விஷயம்!

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்