திரைச்செய்திகள்
Typography

நானும் கொஞ்சம் பணம் போடுறேன். நீங்களும் கொஞ்சம் போடுங்க. சந்தனத்தேவன் படத்தை ஆரம்பிக்கலாம் என்று ஆரம்பத்தில் வாக்கு கொடுத்த ஆர்யாவுக்கு, இவரும் இணைந்து தயாரித்த கடம்பன் சரியான நஷ்டத்தை கொடுத்துவிட்டது.

பணம் புரட்ட முடியாத ஆர்யா, சந்தனதேவன் விஷயத்தில் சவுகர்யம் காட்டாமலிருக்கிறார்.

பொறுத்து பொறுத்துப் பார்த்த ச.சே இயக்குனர் அமீர், வெவ்வேறு படங்களில் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். முக்கியமாக தனுஷ் தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கும் ‘வட சென்னை’ படத்தில் அமீருக்கு ஒரு ஸ்பெஷல் ரோல் கொடுக்கப்பட்டுள்ளது.

முதலில் இந்த கேரக்டரில் நடிப்பதாக இருந்த விஜய் சேதுபதி, வடசென்னை தாமதத்தின் காரணமாக விலகினார். அந்த இடத்தில்தான் அமீர் பொருத்தப்பட்டுள்ளார். இக்கட்டான சூழ்நிலைகளில் ‘இட்டு நிரப்புவது’தான் ஒரே தீர்வு போலும்!

Most Read