திரைச்செய்திகள்

ஐயோ பாவம் ஆகிவிட்டது த்ரிஷாவின் அத்தனை முயற்சியும். தன்னை நாடி வரும் இயக்குனர்களிடம் “முழுக்க முழுக்க ஹீரோயின் சப்ஜெக்டோட வந்தால், என் சம்பளத்தில் சலுகை மற்றும் நானே இப்படத்தின் இன்னொரு பார்ட்னர்” என்றெல்லாம் அள்ளி வழங்கினார்.

அதை நம்பி ஹீரோயின் சப்ஜெக்ட்டில் அவரை பிரதானமாக நடிக்க வைத்த இருவரது மீசையில் ஒரு வண்டி மண். தமிழில் இன்னும் வெளியாகாத நாயகி, தெலுங்கில் முதலில் வெளியாகி செம பிளாப் என்று ஏற்கனவே எழுதியிருந்தோம். இப்போது அவரது இன்னொரு படமான மோகினி, இப்போதுதான் லண்டனில் படமாக்கப்பட்டது. முதல் ஷெட்யூல் போய்விட்டு திரும்பிய படக்குழு, “போதும்... இதோட படத்தை மூடி வச்சுடலாம்” என்ற முடிவுக்கு வந்துவிட்டார்களாம். தெலுங்கில் அவரது படம் கொடுத்த படா பிளாப்புதான் காரணம்! இதனால் அப்செட் ஆன த்ரிஷா கவலையை மறக்க வெளிநாட்டுக்கு கிளம்பிவிட்டார். பாதி பணத்தை இழந்த தயாரிப்பாளர் எந்த நாட்டுக்கு போவாரோ?