திரைச்செய்திகள்
Typography

 

‘அதாகப்பட்டது மகா ஜனங்களே’ என்றொரு படம். தம்பி ராமய்யாவின் மகன் உமாபதி நடித்தது. ராமய்யா மீதிருக்கும் மரியாதை காரணமாக அப்படத்தின் பாடல்களை வெளியிட வந்த சிவகார்த்திகேயனை கொஞ்ச நேரத்தில் கோர்த்துவிட்டு வேடிக்கை பார்த்துவிட்டது அந்த மேடை! நிகழ்ச்சியில் மைக்கை பிடித்த ஒருவர், “இளம் சூப்பர் ஸ்டார் சிவகார்த்திகேயன் அவர்களே” என்று குறிப்பிட, காதை இறுக்க மூடிக் கொண்டார் சிவா.

“நமக்கு அதெல்லாம் வேணாங்க. ஏதோ மக்களுக்கு பிடிச்ச மாதிரி நடிச்சுட்டு போயிட்டு இருக்கேன். இதையெல்லாம் மண்டையில ஏத்திக்கறது இல்லைங்க. நீங்க என்ன சொன்னீங்கன்னு இங்க திருப்பி சொல்லக் கூட நான் தயாரா இல்லை” என்றார் சிவகார்த்திகேயன் படு உஷாராக. ஆனால் அவர் சொல்லி முடிப்பதற்கு கூட அவகாசம் வைக்கவில்லை சோஷியல் மீடியா. ட்விட்டரில் டக்கென கொளுத்திப் போட்டுவிட்டார்கள் விஷயத்தை. நல்லதெல்லாம் நகரக் கூட முடியாம கிடக்கும். கெட்டதுதான் கேட்கறதுக்குள்ள பரவும். உலகம்டா... உலகம்!

Most Read