திரைச்செய்திகள்

ரஜினிக்கும் காமெடி நடிகர் லொள்ளு சபா ஜீவாவுக்கும் ஒரு பற்று குறையாத பாச பந்தம் இருக்கிறது. கோச்சடையான் படத்தில் மோஷன் கேப்சரிங் காட்சிகளில் ரஜினிக்காக தோன்றி டூப் போட்டவர் இந்த ஜீவாதான். அப்படியே அச்சு அசலாக ரஜினி போலவே நடப்பதும், விரல் சொடுக்குவதுமாக இருந்தவரை ரஜினிக்கும் ரொம்பவே பிடித்துப் போய்விட்டது.

இப்போது அந்த நட்பில் மேலும் கொஞ்சம் சலுகை ஜீவாவுக்கு. ரஜினியின் அரசியல் பிரவேச ஐடியாக்களில் முழு சப்போர்ட்டாக இருப்பவர் இவர்தானாம். சினிமா டூப் சினிமாவோடு போகுமா, அரசியல் மேடைகளில் அப்படி இப்படி தொடருமா?