திரைச்செய்திகள்

ரஜினி ஏன் ரஞ்சித் படத்திற்கு மீண்டும் கால்ஷீட் கொடுத்தார்? இவரை விட விறுவிறுப்பாக வேக வேகமாக படம் எடுக்கிற இயக்குனர்கள் ரஜினியை சுற்றி சுற்றி வர... இந்த மழுங்கிய பிளேடுக்கு ஏன் மறுபடி கால்ஷீட்?

இந்த கேள்வியை கேட்காத ஒரிஜனல் அக் மார்க் விமர்சகர்கள் இல்லவே இல்லை. ஆனால் அதற்கான விடை, இதோ ஒரு வாரம் நீட்டிப்பில் தெரிந்துவிட்டது. சுமார் ஒரு மாதம் ஃபுல் கால்ஷீட் கொடுத்து மும்பைக்கு போன ரஜினி, பத்து நாட்களுக்குள்ளாகவே, “என்னை ஆளை விடுங்க தம்பி. மிச்சத்தை சென்னையில செட்ல வச்சு எடுத்துக்கலாம்” என்று சொல்ல, எவ்வித மறுப்பும் சொல்லாமல் “சரி சார்” என்று அனுப்பிவிட்டார் பா.ரஞ்சித். இத... இத... இததான் வாய்ப்புக்கான காரணம் என்கிறது இன்டஸ்ட்ரி. கபாலி நேரத்தில் ரஜினியை ஒருபோதும் கஷ்டப்படுத்தவே இல்லையாம் ரஞ்சித். “இப்படி வாங்க. அப்படி நில்லுங்க. அந்தப்பக்கம் லுக் விடுங்க.கட்...” இதுதான் அதிகப்படியாக ரஜினியை வேலை வாங்குவது. இந்த சுலப சுலப சுக போகங்களுக்காகதான் மீண்டும் மீண்டும் கால்ஷீட்டாம்.

கதாநாயகி, நடன இயக்குநர், சமூக ஆர்வலர், வளர்ந்து வரும் அரசியல்வாதி என பல முகங்கள் கொண்டவர் நடிகை காயத்ரி ரகுராம்.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

முகநூல், ட்விட்டர், இண்டாகிராம், டிண்டர், செயலிகள் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் இல்லாமல் போனால் தற்கால மனிதன் கற்கால மனிதனைப்போல பின்னோக்கிப் போய்விடுவான் என்ற நிலைதான் தற்போது நிகழ்கிறது.

அது 1998-ஆம் வருடம். அப்போது சன் டிவியில் ‘சப்த ஸ்வரங்கள்’ என்ற இசை நிகழ்ச்சி மிகவும் பிரபலம். அந்த நிகழ்ச்சியின் 100-வது வாரத்துக்கு எஸ்.பி.பி. சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார்.

TESS தொலைக் காட்டி

நாம் தனிமையில் இல்லை..! -பாகம் -1 (We are Not Alone..Part-1)

முன்னைய பாகத்தில் நாம் 2009 ஆமாண்டு விண்ணில் ஏவப்பட்ட கெப்ளர் தொலைக் காட்டியினால் அவதானிக்கப் பட்ட வெளிப்புறக் கிரகங்கள் தொடர்பான அறிமுகத்தைப் பார்த்தோம். அதன் தொடர்ச்சி இனி..

சிலுக்கு சுமிதா எண்பதுகளின் கலைஞர். இவரின் ஆடலும் பாடலும் இல்லாத படங்களை வாங்க விநியோகஸ்தர்கள் மறுத்தனர்.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஆரம்பமாகி சூடு பிடித்திருக்கும் இவ்வேளையில் ஐபிஎல் கிரிக்கெட்டின் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் "சலாம் சென்னையே" எனும் இந்த விழிப்புணர்வு வீடியோ பாடலில் தோன்றி கொரோனா நோய்ப்பரவலை தடுக்கும் சுகாதார வழிமுறைகள் குறித்து அறிவுறுத்திகிறார்கள். நீங்களும் சற்று 'கேட்டுத்தான்' பாருங்கள் : 

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்