திரைச்செய்திகள்

நடிகை சாய் தன்ஷிகா எப்போது கபாலியில் ரஜினியுடன் நடித்தாரோ, அப்போதிலிருந்தே கதை கேட்கிற விஷயத்திலேயும் கால்ஷீட் தருவதிலும் படு ஷார்ப் ஆகிவிட்டார்.

அந்தப்படத்தில் கிடைத்த பெயரை கெடுத்துக் கொள்ளக் கூடாது. அதனால்தான் துருவி துருவி கதை கேட்கிறேன். திருப்தியா இருந்தா மட்டும் நடிக்கிறேன் என்கிறார். கலைராஜனுடன் உரு என்ற படத்தில் நடித்திருக்கும் தன்ஷிகா அந்தப்படத்திற்காக செய்த தியாகத்தை வேறு நடிகைகள் செய்திருப்பார்களா என்றால், சத்தியமாக முடியாது என்று சொல்லிவிடலாம். டிசம்பர் மாத குளிரில் ஊட்டியில் ஷுட்டிங். அதுவும் நைட் ஷுட்டிங். ரெயின் எபெக்ட் வேறு. நான்கு மணி நேரம் தொடர்ச்சியாக மழையில் நனைந்து நடித்துக் கொடுத்தாராம். படத்துல மழை இருக்கு. ரஜினி இல்லையேம்மா... எதுக்கு இவ்வளவு ஒத்துழைப்பு?