திரைச்செய்திகள்

ஒரு மேடை தொகுப்பாளினிக்கு வகுக்கப்பட்டிருக்கும் எல்லைகளை மீறினாரா ரம்யா என்ற முணுமுணுப்பை ஏற்படுத்தியது ஒரு பாடல் வெளியீட்டுவிழா.

பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளியான இவர், மணிரத்னத்தின் ஓ.கே கண்மணியில் நடித்தவரும் கூட.

ரங்கூன் பட விழாவில் இப்படத்தின் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமியை பற்றி குறிப்பிட்ட ரம்யா, “நான் என்னோட போன்ல அவர் பெயரை மன உளைச்சல்னுதான் போட்டு வச்சுருக்கேன்.

அந்தளவுக்கு ஒரு படபடப்போடவே இருப்பார் ” என்று கூற, கூட்டத்தில் பயங்கர கைதட்டல். ஐயோ பாவம்... ராஜ்குமாரின் முகத்தில்தான் பேரதிர்ச்சி. என்னதான் நண்பர்னாலும் இப்படியா ரம்யா?