திரைச்செய்திகள்
Typography

எந்த நடிகரும் பேசத் தயங்குகிற விஷயம்தான்.

ஆனால் துணிச்சலாக பேசிவிட்டார் ஜெயம் ரவி.

தியேட்டர் ஸ்டிரைக் பிங்கிய நாளிலிருந்தே தனது கருத்துக்களை ட்விட்டரில் தெரிவித்து வரும் அவர், நடுவில் ‘பிரச்சனை சால்வ்டூ. தியேட்டர் ஓப்பன் ஆகுது’ என்றொரு தகவலையும் போட்டுவிட்டு, அவசரம் அவசரமாக அதை நீக்கிய காமெடியும் நடந்தது.

ஆனால் இந்த விவகாரத்தில் அஜீத், விஜய் இருவரும் கருத்தே சொல்லாமலிருந்ததுதான் கவலைக்குரிய விஷயம் என்று ஜெயம் ரவி சொன்னதை ஆச்சர்யத்தோடு கவனித்தது மீடியா.

எதையும் துணிச்சலாக டீல் பண்ணும் விஷாலே கூட இவ்விருவர் பற்றி வாய் திறக்காத போது ஜெயம் ரவி பேசியது ஆச்சர்யம் இல்லாமல் வேறென்ன?

ஸ்டிரைக்கினால் அதிகம் பாதிக்கப்பட்ட படங்களான வனமகன், இவன் தந்திரன் ஆகிய இரு படத் தரப்புக்கும் இப்போது கொள்ளை சந்தோஷம்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்